போராடி தோற்றது நெதர்லாந்து! அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை !
\
அத்துடன், சரித் அசலன்க 31 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் நெதர்லாந்து அணியின் பவுல் வான் மீகெரென் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அத்துடன்,பாஸ் டி லீடே 03 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், டிம் வான் டெர் குக்டன் 03 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த இன்னிங்சில் மொத்தமாக 04உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. அணிசார்பில் அதிகபடியாக மேக்ஸ் ஓடவுட் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இருபதுக்கு 20 போட்டிகளில் அவர் பெற்ற 10ஆவது அரைச்சதம் இதுவாகும். இவர் 53 பந்துகளுக்கு முகங்கொடுத்து 06 நான்கு ஓட்டங்கள் 03 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இவ்வாறு 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், ஸ்கொட் எட்வர்ட்ஸ் 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 04 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அத்துடன், மஹீஷ் தீக்ஷன 02 விக்கெட்டுக்களையும், பினுர பெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும், லஹிரு குமார ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்த இன்னிங்சில் மொத்தமாக 11 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
போராடி தோற்றது நெதர்லாந்து! அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை !
Reviewed by Author
on
October 20, 2022
Rating:

No comments:
Post a Comment