ஓமான் மற்றும் சவுதியில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
இதனிடையே, ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ.குஷான் என்பவர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் அவர் நேற்று(29) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ. குஷான் என்பவர் நேற்று(29) அதிகாலை 3.55 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஓமான் மற்றும் சவுதியில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
Reviewed by Author
on
November 30, 2022
Rating:

No comments:
Post a Comment