தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட சிறுவன் உள்ளடங்களாக இந்திய மீனவர்கள் 15 பேர் மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை தலா ஒரு வருட சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து குறித்த மீனவர்களை விடுதலை செய்தார்.
-இந்த நிலையில் குறித்த 15 பேரும் மிகிரியாகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
-மேலும் படகு ஒன்றின் உரிமையாளர் இன்றைய தினம்(17) சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது படகை விடுவிக்க கோரி சட்டத்தரணி ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.
-இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த படகின் உரிமையாளரை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டதோடு,குறித்த விசாரணை யை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட சிறுவன் உள்ளடங்களாக இந்திய மீனவர்கள் 15 பேர் மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை
Reviewed by Author
on
November 17, 2022
Rating:

No comments:
Post a Comment