ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள்- உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை!
முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர்.
ஆனால, தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை விதித்துள்ளனர்.
அதேபோல் பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே 6ஆம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.
.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள்- உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை!
Reviewed by Author
on
November 12, 2022
Rating:

No comments:
Post a Comment