மன்னாரில் மாணவர்கள் மத்தியில் வீதி விபத்து குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு
நாட்டில் ஏற்படும் விபத்துக்களினால் ஏற்படுகின்ற காயங்கள் காரணமாக மரண சம்பவங்கள் நிகழ்வதோடு, நிரந்தர அங்கவீனமும் ஏற்படுகிறது. இந்த நிலையில் விபத்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மற்றும் பிராந்திய தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று (24) வியாழக்கிழமை மதியம் மன்னார் பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்து பிரிவினருடன் இணைந்து பிராந்திய தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவினரால் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வீதிப் பாதுகாப்பு, விபத்து தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது வீதிப் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மற்றும் பிராந்திய தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து ஏற்படும் வீதி விபத்துக்கள் குறித்தும்,விபத்துக்களில் இருந்து எம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட பாதுகாப்பு விடையங்கள் குறித்து மாணவர்களுக்கு தெளிவு வ படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மாணவர்கள் மத்தியில் வீதி விபத்து குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு
Reviewed by Author
on
November 25, 2022
Rating:
Reviewed by Author
on
November 25, 2022
Rating:

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment