GI குழாய் வழக்கு: கெஹெலிய உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத் தடை
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளர் சந்திரபால லியனகே, முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தலா 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை, 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தார்.
இந்த வழக்கு பெப்ரவரி முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
GI குழாய் வழக்கு: கெஹெலிய உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத் தடை
Reviewed by Author
on
November 23, 2022
Rating:

No comments:
Post a Comment