சுகாதார அமைச்சு பெற்றோருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
பிள்ளைகளின் நடத்தைகள் தொடர்பில் பெற்றோர் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிள்ளைகள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் G.விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். பாடசலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக தமது பிள்ளைகளின் நாளாந்த செயற்பாடுகள் மற்றும் அவர்களின் நடத்தைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையத்தளங்களூடாகவும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதால், சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது குறித்தும் பெற்றோர் விசேட கவனம் செலுத்துவது அவசியம் எனவும் வைத்தியர் வலியுறித்தியுள்ளார்.
சுகாதார அமைச்சு பெற்றோருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
Reviewed by Author
on
December 04, 2022
Rating:

No comments:
Post a Comment