பெருமளவான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெருமளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் வைத்து குறித்த பெண் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 01 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் சுமார் 08 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி ஐஸ் போதைப்பொருள் 25000 ரூபா பெறுமதியானது எனவும் ஹெரோயின் போதைப்பொருள் 400,000 ரூபா பெறுமதியானது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் கைது செய்யப்பட்ட பெண்ணும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவ புலனாய்வுத்துறையினரின் செயற்பாடுகள் காரணமாக அண்மைக்காலமாக பல இடங்களில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெருமளவான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
Reviewed by Author
on
December 04, 2022
Rating:
Reviewed by Author
on
December 04, 2022
Rating:


No comments:
Post a Comment