அண்மைய செய்திகள்

recent
-

யாழில் பிரபல சைவ உணவகத்தில் வடையில் காணப்பட்ட கரப்பான் பூச்சி!

யாழ்ப்பாணத்தில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் கடந்த மாதம் 04.12.2022ம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டது. முறைப்பாட்டை அடுத்து யாழ்.சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், அன்றையதினமும் மறுதினமும் யாழ் நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டது. அத்துடன் குறித்த உணவகத்திற்கு வடை தயாரித்து வழங்கும் சமையற்கூடமும் இனங்காணப்பட்டது. 

 பொது சுகாதார பரிசோதகரின் பரிசோதனையில் அங்கும் குறைபாடுகள் இனங்காணப்பட்டது. இதனையடுத்து தனித்தனியாக உணவகத்திற்கும், சமையற்கூடத்திற்கும் எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் 06.12.2022 அன்று பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் ஆல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உணவகத்தினையும் சமையற்கூடத்தினையும் வழக்கு நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் வரை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது

யாழில் பிரபல சைவ உணவகத்தில் வடையில் காணப்பட்ட கரப்பான் பூச்சி! Reviewed by Author on January 16, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.