ரதெல்ல விபத்து: 53 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை- பேருந்து சாரதியை கைதுசெய்ய நடவடிக்கை!
 இதனிடையே பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பேருந்தின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து சாரதியின் கவனக்குறைவா அல்லது இது இயந்திரக் கோளாறா? வேறு ஏதேனும் கோளாறா என்பது இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பேருந்து, நேற்றிரவு வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் அடங்களாக 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
.
.
ரதெல்ல விபத்து: 53 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை- பேருந்து சாரதியை கைதுசெய்ய நடவடிக்கை!
 
        Reviewed by Author
        on 
        
January 21, 2023
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
January 21, 2023
 
        Rating: 


No comments:
Post a Comment