உள்ளூராட்சி தேர்தல் குறித்த மனுவொன்று நாளை பரிசீலனை!
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவர் சமர்ப்பித்த ரிட் மனு நாளை (20) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நாளை குறிதி்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக உயர் நீதிமன்ற வழக்குகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த 10ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, அடுத்தகட்ட பரிசீலனைக்காக 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனவே குறித்த மனுவை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் அழைக்குமாறு கோரி கேணல் தனது சட்டத்தரணிகள் ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்தார்.
அதன் பின்னணியில், இது தொடர்பான மனுவை நாளை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
Reviewed by NEWMANNAR
on
February 19, 2023
Rating:


No comments:
Post a Comment