கொட்டகலை ரொசிட்டா புகையிரத பாலத்துக்கு அருகில் இன்று (07) ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 50 முதல் 55 வயதுக்குட்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், அவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த உடரட்டமெனிக்கே புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த நபரின் சடலம் அதே ரயிலில் ஹட்டன் புகையிரத நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment