துருக்கி, சிரியா நிலநடுக்கம் : முற்றாக அழிந்த கிராமம் ! 37 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்
அந்நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்துவிட்டது.
அங்கு அனைத்து வீடுகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன. இடிந்து விழுந்த வீடுகளில் இருந்து குளிர்சாதன பெட்டி, வொஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் மீட்டு வருகிறார்கள். இதே போல் பல கிராமங்களில் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நிலநடுக்க மீட்புப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிட இடிபாடுகளில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்று மோப்ப நாய் மற்றும் கேமராக்கள் மூலம் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
மேலும் சில இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து யாராவது உதவி குரல் எழுப்புகிறார்களா என்று சோதனை செய்யப் டுகிறது.
அப்படி குரல் ஏதாவது கேட்டால் இடிபாடுகளை அகற்றுகிறார்கள். கஹ்ரமன்மரஸ் மாகாணத்தில் 183 மணி நேரத்துக்கு பிறகு 10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். அதே போல் ஹடாய் மகாணாத்தில் 182 மணி நேரத்துக்கு பிறகு 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி, சிரியா நிலநடுக்கம் : முற்றாக அழிந்த கிராமம் ! 37 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்
Reviewed by Author
on
February 15, 2023
Rating:
Reviewed by Author
on
February 15, 2023
Rating:


No comments:
Post a Comment