மன்னாரில் 180 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்
குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், விசேட தேவைக்குரிய குடும்பங்கள், மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட அடிப்படை சட்ட உதவி தேவையுடைய குடும்பங்கள் உள்ளடக்கப்பட்டு குறித்த உலர் உணவு வழங்கப்பட்டது.
வாழ்வாதாரத்துடன் கூடிய நிவாரணம் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் வழங்குவது என்ற அடிப்படையில் 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் மற்றும் வாழ்வாதாரம் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதல் கட்ட பணிகள் நேற்று திங்கட்கிழமை (6) முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு,. சவேரியார் புரம், காயாக்குளி, கரடிக்குளி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 33 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக ஏனைய குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது
.
.
மன்னாரில் 180 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்
Reviewed by Author
on
February 07, 2023
Rating:

No comments:
Post a Comment