மன்னார் - மடு பகுதியில் ..உயிர் பலியில் முடிந்த நண்பர்கள் இடையிலான வாய்த்தர்க்கம்
மன்னார் - மடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டுத் துப்பாக்கி மூலமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்று(26) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
இதன்போது குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

No comments:
Post a Comment