தன் மகனின் பார்வைக்காக கையேந்தும் நிலையில் முன்னால் போராளி தமிழ் கீதன் ஒர் பாதத்தை இழந்த நிலையில் நிர்கதியாகியுள்ள தமிழ் கீதனின் வாழ்கை
இலங்கையில் இடம் பெற்ற 30 ஆண்டு போர் தமிழர் வாழ்வியலில் பல விதமான மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது இந்த கொடூர யுத்ததினால் தமிழர் தாயக பகுதிகளில் பலர் இறந்து போனார்கள், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்,என்னும் பலர் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலை
ஆனாலும் யுத்ததின் வடுக்களினாலும் நேரடியாக யுத்ததினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்
தமிழ் மக்களின் விடுதலைக்காய் தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி தற்போது மாற்றுத்திறனாளியகியுள்ள சிலுவைராச என அழைக்கப்படும் தமிழ் கீதனின் தற்போதைய நிலையே இது
மன்னார் விடத்தல் தீவு பகுதியை சேர்ந்த தமிழ் கீதன் “யாழ் செல்லும் படையணியை” சேர்ந்த வீரர் ஆவார் மாங்குள யுத்தம் ஓயாத அலைகள் நடவடிக்கை போன்ற சமர்களில் கலந்து கொண்ட தமிழ் கீதன் தற்போது தோட்டவெளி ஜேசேவாஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்து வருகின்றார்
1999 ஆண்டு ஆனையிறவு பகுதியில் இடம் பெற்ற யுத்ததின் போது தனது ஒரு காலின் பாதத்தை முழுவதுமாக இழந்த தமிழ் கீதன் மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் மாற்றுத்திறனாளியானார் ஒழுங்காக நடக்க முடியாத நிலையில் தனது 3 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை பராமறிப்பதற்காக தமிழ் கீதன் தனக்கு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று குடும்பத்தை பாராமறித்து வருகின்றார்
ஆனாலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி வாழ்க்கைகான செலவு அதிகரிப்பு என அனைத்து தமிழ் கீதனின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது
குடும்ப வறுமை காரணமாக தமிழ் கீதனின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் சிறிய சம்பளத்திற்காக சுத்திகரிப்பு பணியாளராக வேலை செய்து வருகின்றார்
இவ்வாறான துன்பியல் நிலையில் தமிழ் கீதனின் மூத்த மகள் உயர்தரத்தில் கல்வி பயில்கின்றார் இரண்டாவது மகன் விபத்து ஒன்றினால் பாதிக்கப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு அவரும் மாற்றுத்திறனாலியாய் மாறியுள்ளார்
அத்துடன் இவரின் மூன்றாவது மகனும் பிறவியில் இருந்த பார்வை இல்லாத குழந்தையாக பிறந்துள்ளார்
இவ்வாறு தானும் தன் இரு மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடனும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத நிலையில் அன்றாடம் தவித்து வருகின்றார் இந்த முன்னால் போராளி
மகனின் பார்வைக்காக பல சிகிச்சைகளை மேற்கொண்ட போதிலும் தன்னிடம் இருந்த படகு மற்றும் இதர சொத்துக்களை விற்று சிகிச்சை மேற்கொண்டும் எவையும் பலன் தராத நிலையில் மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றார் இந்த முன்னால் போராளி
இவரின் மகனின் கண்களை விழித்திரை மறைப்பதினால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் அவ் விழித்திரையை சரி செய்யும் சிகைச்சையை மேற்கொள்ள வசதியில்லாமல் தவித்து வருகின்றார் தமிழ் கீதன்
தனக்கு ஆடம்பர உதவிகள் எதுவும் செய்யாவிட்டாலும் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவிக்கும் ஏதேனும் உதவிகளை புலம்பெயர் உறவுகள் வழங்க முன்வந்தால் தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய மகனின் சிகிச்சையையும் கொண்டு நடத்த உதவியாக இருக்கும் என தமிழ் கீதன் கோரிக்கை விடுக்கின்றார்
அவ்வாறு வாழ்வாதார உதவிகள் வழங்க விரும்பாவிடின் எனது மகன் பார்வை பெறுவதற்கு மேலதிக சிகிச்சை வழங்குவதற்கான உதவிகளையாவது யாரும் வழங்க முன்வருமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுக்கின்றார் தமிழ்கீதன்
கல்விகற்க வேண்டிய வயதில்,இளைஞனாய் சுற்றித்திரிய வேண்டிய வயதில் நமக்காகவும் நம் இனத்தின் விடுதலைக்காகவும் கைகளில் ஆயுதத்தை ஏந்தி அங்கத்தை இழந்து வாழ்கையை முன் கொண்டு செல்ல முடியாத இவ்வாறான முன்னால் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது நம் கடமையல்லவா
ஆடம்பர செலவுகளுக்காக லட்சங்களை செலவு செய்யும் நாம் தமிழ் கீதன் போன்ற முன்னால் போராளிகளுக்கு ஆயிரங்கள் வழங்கினாலும் அது அவர்களுக்கு போதுமானது
மேலதிக தொடர்புகளுக்கு
தமிழ்கீதன்(சிலுவைராசா)
(77) 518 4741
தன் மகனின் பார்வைக்காக கையேந்தும் நிலையில் முன்னால் போராளி தமிழ் கீதன் ஒர் பாதத்தை இழந்த நிலையில் நிர்கதியாகியுள்ள தமிழ் கீதனின் வாழ்கை
Reviewed by Admin
on
March 31, 2023
Rating:
Reviewed by Admin
on
March 31, 2023
Rating:







No comments:
Post a Comment