மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற இளம் இசை,வாத்திய கலைஞர்களுக்கான பயிற்சி பட்டறை
மன்னார் மாவட்டத்தில் உள்ள இளம் இசைக்கலைஞர்கள் மற்றும் இளம் வாத்திய கலைஞர்களுக்கான பயிற்சி பட்டறை சனிக்கிழமை (25) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள சிறந்த இளம் கலைஞர்கள் வாத்திய கலைஞர்கள் மற்றும் கூத்துக் கலைஞர்கள் குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்து பயிற்சி பட்டறையை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாண ஆளுநரின் விசேட பணிப்பில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் குறித்த பயிற்சி பட்டறையை ஒழுங்கு படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
(மன்னார் நிருபர்)
(26-03-2023)
Reviewed by NEWMANNAR
on
March 26, 2023
Rating:












No comments:
Post a Comment