மன்னாரில் பாரம்பரிய நெல் இன அறுவடை முன்னெடுப்பு.
எந்த ஒரு இயந்திர சாதனங்களையும் பயன்படுத்தாது பாரம்பரிய முறையில் விதைப்பு மேற்கொண்டு அருவி வெட்டி சூடு மிதித்து அனைத்தும் இயற்கையான பாரம்பரிய முறைப்படி இடம் பெற்றது.
ஏனைய செய்கைகளை விட சுவடை இன நெல் மூன்று மாத காலப்பகுதிக்குள் அறுவடைக்கு தயாராகும் என்பதுடன் தற்போது மூடை பத்தாயிரம் ரூபாய்க்கு (10.000)அதிகமான விலைக்கு கொள்வனவு செய்யப்படுகிறது.
மெசிடோ நிறுவனமானது கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு பாரம்பரிய நெல் இனங்களை பாதுகாக்கும் முகமாகவும் நஞ்சற்ற விவசாய செய்யையை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு சீணட்டி, மொட்டைகறுப்பன், சுவடை, பச்சைபாளை போன்ற நெல் இனங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாரம்பரிய நெல் இன அறுவடை முன்னெடுப்பு.
Reviewed by Author
on
March 01, 2023
Rating:

No comments:
Post a Comment