மன்னாரிற்கு வந்து கலந்துரையாடலை மேற்கொண்ட 'சூழலியல் நீதிக்கான மையம்' பிரதிநிதிகள் அடங்கிய குழு
 குறித்த நடவடிக்கை தொடர்பில் ஆராயும் நோக்கோடு 'சூழலியல் நீதிக்கான மையம்' பிரதிநிதிகள் அடங்கிய குழு கொழும்பிலிருந்து மன்னாருக்கு  வருகை தந்து இன்று (20) காலை சுமார் 9 மணி அளவில் OPEnE நிறுவனம் ஒன்றின் மாநாட்டு மண்டபத்தில் மன்னார் மாவட்ட மற்றும் மன்னர் தீவு பகுதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
 குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட  அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு மக்களின் விருப்பு வெறுப்புகளை ஆராய்ந்து கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஆலோசனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 மன்னார் தீவு பகுதியில் மேலதிகமாக நிறுவப்படும் காற்றாலை மின்சாரம் பொருத்தும் வேலை திட்டத்தை மக்கள்   முற்றாக தடை செய்யும் பல்வேறு காரணங்கள் அடங்கிய கருத்தை கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினரிடம் தெரிவித்ததை அடுத்து குறித்த நடவடிக்கைக்காக சர்வதேச மற்றும் தேசிய ரீதியில்  மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பதுடன் சட்ட நடவடிக்கை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 மன்னாரிற்கு வந்து கலந்துரையாடலை மேற்கொண்ட  'சூழலியல் நீதிக்கான மையம்' பிரதிநிதிகள் அடங்கிய குழு
 
        Reviewed by Author
        on 
        
March 20, 2023
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 20, 2023
 
        Rating: 


No comments:
Post a Comment