புதிதாக நியமனம் பெற்ற மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கௌரவிப்பு.
மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபராக நியமனம் பெற்றுள்ள மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்த டிலுஷன் பயஸ் என்பவரை கௌரவிக்கும் முகமாக அக்கடமி கராத்தே கழகத்தின் சார்பாக குறித்த கழகத்தின் பிரதம ஆசிரியர் எம்.அன்ரனி இன்பராஜ் தலைமையில் இன்று (21) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வாழ்த்து மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன் போது மன்னார் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், மன்னார் மாவட்ட கராத்தே கழகத்தின் செயலாளர்,வை.எம்.சி.ஏ.கலை மன்ற இயக்குனர்,ஆகியோர் கலந்து கொண்டு உதவி அரசாங்க அதிபருக்கு வாழ்த்து மடல் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(21-03-2023)
புதிதாக நியமனம் பெற்ற மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கௌரவிப்பு.
Reviewed by NEWMANNAR
on
March 21, 2023
Rating:

No comments:
Post a Comment