மாந்தை மேற்கில் 20 மாணவர்களுக்கு 'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் எண்ணக்கரு விற்கிணங்க புத்தகப்பை வழங்கி வைப்பு.
'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் எண்ணக்கரு விற்கிணங்க சமூக ஆர்வலரும் கிராம அலுவலருமான எஸ்.லுமாசிறி அவர்களின் முயற்சியில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு இன்றைய தினம்(5) புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வசித்து வரும் அவரது நண்பரின் நிதிப் பங்களிப்பில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன், மாளிகைத்திடல், வேட்டையா முறிப்பு ஆகிய கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு இவ்வாறு புத்தகப் பை வழங்கி வைக்கப்பட்டது.
மாந்தை மேற்கில் 20 மாணவர்களுக்கு 'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் எண்ணக்கரு விற்கிணங்க புத்தகப்பை வழங்கி வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
April 05, 2023
Rating:

No comments:
Post a Comment