மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி!
உயிர்த்த ஞாயிறு திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்லியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றதோடு, தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலி!
Reviewed by NEWMANNAR
on
April 09, 2023
Rating:

No comments:
Post a Comment