அன்பு உறவுகளுக்கு நியூமன்னார் ஊடக குழுமத்தின் சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
மகிழ்ச்சி நிறைந்த மங்கலகரமான சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.
வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.
மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இது திகழ்கிறது.
அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
மங்கலங்கள் நிறைந்த சோபகிருது..
மகிழ்ச்சி நிறையட்டும்..
புது மாற்றங்கள் மலரட்டும்
சோகங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
Reviewed by NEWMANNAR
on
April 13, 2023
Rating:


No comments:
Post a Comment