யாழ் பண்ணை அம்மன் சிலை வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் முன்னிலையாகினார். ஏனைய பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.
சிலை வைப்பதற்கு தடையில்லை, எனினும், அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
என்.சிறிகாந்தா, எம்.ஏ.சுமந்திரனின் வாதத்தையடுத்து, எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
April 18, 2023
Rating:



No comments:
Post a Comment