மன்னார் முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுவதீசன் மீது தாக்குதல்-பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி.
மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சசி என அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுவதீசன் (வயது-44) என்பவர் மீது இன்று செவ்வாய்க்கிழமை (30) மாலை 5 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் வைத்து குழு ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் சுவதீசன் தெரிவிக்கையில்,,,
மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (30) மாலை சிலர் முரண்பாட்டுக் கொண்டிருந்தனர்.
இவ்விடயம் குறித்து முச்சக்கர வண்டி தலைவர் என்ற வகையில் குறித்த முரண்பாடு குறித்து மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தும் வகையில் தொலைபேசி ஊடாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன்.
-இதன் போது எமது சங்கத்தைச் சேர்ந்த 4 முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் அழைத்து வரப்பட்ட சுமார் 20 பேருக்கு மேற்பட்ட நபர்கள் என் மீது முச்சக்கர வண்டியில் வைத்து கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.
-இதன் போது எமது சங்கத்தைச் சேர்ந்த 4 முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் அழைத்து வரப்பட்ட சுமார் 20 பேருக்கு மேற்பட்ட நபர்கள் என் மீது முச்சக்கர வண்டியில் வைத்து கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.
எமது சங்கத்தின் முன்னாள் செயலாளரின் செயல்பாடு சரி இல்லாத நிலையில் அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
முன்னாள் செயலாளருக்கு எதிராக முச்சக்கர வண்டி சங்கத்தினாலும் மன்னார் பொலிஸாரினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
.இதனால் அவருடன் சேர்ந்த ஒரு சிலர் எங்களுடன் முரண்பட்ட நிலையில் இத் தாக்குதலின் பின்னணியில் என்னுடன் முரண்பட்ட 4 முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சுமார் 20 பேருக்கு மேற்பட்டவர்களை அழைத்து வந்து என் மீது கடுமையாக தாக்கியுள்ளனர்.
தற்போது நான் பலத்த காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
என்னை கொலை செய்யும் நோக்குடன் அவர்கள் என் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுவதீசன் மீது தாக்குதல்-பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி.
Reviewed by NEWMANNAR
on
May 30, 2023
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 30, 2023
Rating:





No comments:
Post a Comment