மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து தொல்பொருள் என சந்தேகிக்கும் சிறிய அளவிலான முருகன் சிலையுடன் மூவர் கைது.
தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(7) மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான முருகன் சிலை ஒன்றை தம் உடமையில் வைத்திருந்த தன் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து தொல்பொருள் என சந்தேகிக்கும் சிறிய அளவிலான முருகன் சிலையுடன் மூவர் கைது.
Reviewed by NEWMANNAR
on
May 08, 2023
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 08, 2023
Rating:




No comments:
Post a Comment