ஜோசப் அமுதன் டானியல் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.
மன்னார் சின்னக்கடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் அமுதன் டானியல் அகில இலங்கை சமாதான நீதவானாக இன்று(15) திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிவரும் ஜோசப் அமுதன் டானியல் அரச சேவையில் 2006.01.02 இல் இணைந்தார்.
தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் புலமை உள்ள அமுதன் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா , கணினி அறிவியலில் இளமானி கற்கை(B.Sc), பட்டப் பின் பட்டையக் கல்வி(PGDCA) மற்றும் சமூகவியலில் முதுமானி கற்கை (MA) உட்பட 12 டிப்ளமோக்களையும் நிறைவு செய்துள்ளார்.
மேலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (யாழ் நிலையம்) சட்டபீட மாணவருமாவார்.
ஜோசப் அமுதன் டானியல் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.
Reviewed by NEWMANNAR
on
May 15, 2023
Rating:

No comments:
Post a Comment