மன்னார் முருங்கன் பிரதான வீதிக்கு வந்த யானை.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி முருங்கன் கட்டுக்கரை பிரதான வீதியூடாக நேற்று புதன்கிழமை(3) மாலை காட்டு யானை ஒன்று திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடாக போக்கு வரத்தை மேற்கொண்ட மக்கள் அச்சமடைந்தனர்.
சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வரும் நிலையில் கட்டுக்கரை குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள யானை ஒன்று வழி தவறி இவ்வாறு பிரதான வீதி பகுதிக்கு வந்துள்ளது.
பின்னர் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் வீதியால் சென்றவர்கள் குறித்த யானையை துரத்த குறித்த யானை கட்டுக்கரை குளம் பகுதியூடாக அப்பகுதியில் இருந்து வெளியேறியது.
மன்னார் முருங்கன் பிரதான வீதிக்கு வந்த யானை.
Reviewed by NEWMANNAR
on
May 04, 2023
Rating:

No comments:
Post a Comment