கம்பளை யுவதி கொலை: சந்தேகநபரின் வாக்குமூலத்தில் மேலதிக தகவல்கள் வெளியாகின.
கம்பளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலத்தின்படி ஆறு நாட்களாக காணாமல் போயிருந்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த பொலிஸார், கெலிஓயாவில் பணிபுரியும் இடத்திற்கு பஸ்ஸில் ஏறுவதற்காக யுவதியை பின்தொடர்ந்து சென்ற சந்தேக நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், பெண்ணை தன்னுடன் காட்டுக்குள் செல்ல வற்புறுத்தியதாகவும், அவர் மறுத்ததால், அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொன்று உடலை புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
விசாரணையின் போது, சம்பவ இடத்தில் இருந்து அவரது குடையின் பாகங்கள், அவரது ஜோடி செருப்புகள் மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
கெலிஓயாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிபவரும் கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் பாத்திமா மூனவுவர (வயது 22) என்ற யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போயிருந்தார்.
Reviewed by NEWMANNAR
on
May 13, 2023
Rating:


No comments:
Post a Comment