பரிசில் (France) ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான’ போட்டியில் முதல் பரிசுவென்ற ஈழத்தமிழன்..!
பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான’ போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை வென்றிருக்கிறார் ஈழத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா.
La meilleure baguette de Paris என்பது போட்டியின் பெயர். தமிழில் ‘பரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும். 30 வது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டியில், இம்முறை 126 பேர், பிரான்சின் பாரம்பரியம்மிக்க baguette பாணை தயாரித்து போட்டிக்கு அனுப்பியிருந்தனர்.
இதில் பரிசின் 20 ஆம் வட்டாரத்தில் வெதுப்பகம் வைத்து நடத்திவரும், 30 வயதான தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து, முதல் பரிசை வென்றிருக்கிறது.
இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், பிரான்சின் ஜனாதிபதிக்கு, அவரது எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷன் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது.
இவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்..!
Reviewed by NEWMANNAR
on
May 11, 2023
Rating:





No comments:
Post a Comment