பிரித்தானியாவில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாமியாருக்கு பிணை மறுப்பு!!
பல்லேறு பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் கைதுசெய்யப்பட்டு கடந்த 3 நாட்களாக பிரித்தானிய காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுவந்த முரளிக்கிருஷ்ணா என்ற சாமியார் இன்று நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணை மறுக்கப்பட்டு மீண்டு காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாலியல் தொடர்பான வழக்குகளுக்கு பிரித்தானிய நீதிமன்றங்களில் பிணை கிடைப்பது கடினம் என்று கூறப்பட்டுவந்த நிலையிலேயே, இன்று அவருக்கான பிணை மறுப்பு இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் மத்தியில் பிரபல்யமான சாமியார் முரளிகிருஸ்ணன் என்பவரை Colindale காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்தது யாவரும் அறிந்ததே.
கடந்த இரண்டரை நாட்களாக அவர் மீது கால்துறையினர் மேற்கொண்ட கடுமையான விசாரணைகளைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தின் இணையத்தளத்தில் அவரது வழக்கு சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 'பாலியல் முறைகேட்டு' குற்றச்சாட்டுக்களே முரளிகிருஷ்ண சுவாமிகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது” என தெரியவந்துள்ளது.
16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதையுடைய பெண் மீது பாலியல் வன்முறை புரிந்துள்ளதான (Rape) ஒரு குற்றச்சாட்டும், 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதையுடைய பெண் ஒருவர் மீது பாலியல் ரீதியிலான தாக்குதலை மேற்கொண்டார் (sexual Assault) என்கின்றதான மற்றொரு குற்றச்சாட்டும், ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார் (attempt to rape) என்கின்ற மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக நீதிமன்ற இணையத்தளப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியச் சட்டத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடமுடியாது என்றும் நீதிமன்ற இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னை கடவுள் என்று கூறிவருகின்ற கேரளாவைச் சேர்ந்த குறிப்பிட்ட இந்தச் சாமியார் மீது அண்மைக்காலமாக பலவிதமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக குறிப்பிட்ட அந்தச் சாமியார் தொடர்பான ஆபாச காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரிமாறப்பட்டு வந்ததுடன், பல பெண்களுக்கு அவர் அசிங்கமான செய்கைகளை வெளிப்படுத்துவதான காணொளிகளை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, முடிவரவு குடியகல்வு மீறல்கள் உட்பட வேறு பல குற்றச்சாட்டுக்களும் குறிப்பிட்ட இந்த முரளிக்கிருஷ்ணா மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், அது பற்றிய விசாரணைகள் அடுத்த வருகின்ற நாட்களில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை, குறிப்பிட்ட இந்த சாமியாரினால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது ஈழத்தமிழர்கள் இருந்தால், அவர்கள் காவல்துறையினரிடம் முன்வந்து சாட்சிபகரவேண்டும் என்று புலம்பெயர் சட்டத்தரணி ஒருவர் கேட்டுக்கொண்டார்

No comments:
Post a Comment