பொலிஸாரால் துரத்தப்பட்ட 15 வயது சிறுவன் - ஆம்புலன்ஸ் மீது மோதி பரிதாபமாக உயிரிழப்பு!
பிரித்தானியாவில் பொலிஸார் துரத்தி சென்ற 15 வயது சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதி உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் சால்ஃபோர்டில்(Salford) இ-பைக்கில் பயணம் செய்த 15 வயது சிறுவனை பொலிஸார் துரத்திய நிலையில், எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தான்.
குறித்த சம்பவம் கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் வழங்கிய தகவலில், அதிகாரிகள் ஃபிட்ஸ்வாரன் சாலையில்(Fitzwarren Street) இ-பைக்கில் சென்ற சிறுவனை பிற்பகல் 2 மணியளவில் பின் தொடர தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் சாலை தடுப்புகள் குறுக்கீட்டால் பொலிஸாரின் பின் தொடர்தல் பாதியில் தடைபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லாங்வொர்த்தி சாலையில்(Langworthy Road) இ-பைக் ஒன்று ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் இ-பைக்கில் பயணம் செய்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் நடத்தைகளுக்கான சுதந்திர அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
சாலைகள் விசாரணைக்காக தடுப்புகள் கொண்டு மறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை ஆதரவு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.
Reviewed by Author
on
June 09, 2023
Rating:


No comments:
Post a Comment