கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்கும் திட்டத்தினை கைவிடுங்கள் – சார்ள்ஸ் எம்.பி. கோரிக்கை
மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை முழுமையாக கைவிடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ள அவர், குறித்த வலயங்களை உருவாக்குவதற்காக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் காணிகள் மற்றும் இதர விபரங்கள் கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரு வலயங்களையும் உருவாக்கி விஸ்தரிக்க முயல்வதால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் பறிபோவதுடன் மக்கள் குடிப்பரம்பலில் மாற்றம் நிகழ்வதற்கான சூழல்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, ஜே வலயத்தினை முன்னெடுப்பதன் ஊடாக 37 கிராமங்களை இழக்கவேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன என்றும் குறித்த வலயங்களுக்கு மகாவலி கங்கையின் நீர் கொண்டுவரப்படுவதும் கேள்விக்குறியான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே மக்களின் நன்மை கருதி மேற்படி இரு வலயங்களுக்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதிருக்க தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு சாள்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Reviewed by Author
on
June 11, 2023
Rating:


No comments:
Post a Comment