ஜேர்மனியை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
ஜேர்மனியின் ஹானோவர் நகரில் இரண்டாம் உலக போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, சுமார் 8,100 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்வதற்காக ஹானோவர் நகரில் வாழ்ந்த சுமார் 8,100 பேர், தங்களுக்கு தேவையான உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து க்கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் வெடிகுண்டை செயலிழக்க செய்ததும், தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்ததை அடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதன் போது அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்யப்பட்டது.
வானிலிருந்து வீசப்பட்ட இந்த குண்டு 500 கிலோகிராம் எடையுள்ளதாக இருந்ததுடன், அதன் உடனே வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் ஃபியூஸும் இருந்ததால், அதை செயலிழக்க செய்வது சற்று கடினமான விடயமாக இருந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்
ஜேர்மனியை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
Reviewed by Author
on
June 21, 2023
Rating:

No comments:
Post a Comment