அண்மைய செய்திகள்

recent
-

காணாமற்போன பிரபல நடிகர் சடலமாகக் கண்டெடுப்பு

 பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஹொலிவூட் நடிகரான ஜூலியன் சாண்ட்ஸ் கடந்த ஜனவரி மாதம் காணாமற் போன நிலையில் கலிபோர்னியாவின் மலைப்பகுதியொன்றில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவின் மலைப்பகுதியொன்றில் இருந்தே 65 வயதான சாண்ட்ஸின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை குறித்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட சிலர் அப்பகுதியில் மனித எச்சம் ஒன்று இருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர   விசாரணையில் அவர் காணாமற் போன சாண்ட்ஸ், என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவர் எவ்வாறு மரணமடைந்துள்ளார் என்பது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது மரணம் அவரது ரசிகர்களுக்கும் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலியன் சாண்ட்ஸ்  ஒஸ்கார் விருது பெற்ற திரைப்படமான எ ரூம் வித் எ வியூ மற்றும் தொலைக்காட்சி நாடகங்களான 24 மற்றும் ஸ்மால்வில்லில் நடித்து பிரபலமடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




காணாமற்போன பிரபல நடிகர் சடலமாகக் கண்டெடுப்பு Reviewed by Author on June 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.