மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம் அரச அதிபர் தலைமையில்-பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு.
மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக ஜெய்க்கா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட விவசாய பிரிவின் செயல்பாடுகள்,நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள்,மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகள், வங்கிகளின் விவசாயம் சார் செயல்பாடுகள், விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி தொடர்பான செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நீர்ப்பாசன பணிப்பாளர்,நீர்ப்பாசன பொறியியலாளர்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம் அரச அதிபர் தலைமையில்-பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு.
Reviewed by Author
on
June 02, 2023
Rating:

No comments:
Post a Comment