விமானம் தரையிறங்கும் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் கட்டணத்தை ஒரு வருடத்திற்கு 50 வீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் குறித்து விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள விமான நிலையத்திற்கு அதிகளவு விமானங்களை வரவழைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக முதல் நான்கு வருடங்களில் விமான சேவை நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் முதல் ஆண்டில் 100 சதவீதமும் இரண்டாம் ஆண்டில் 50 சதவீதமும் கட்டணத்தை தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.47u=
Reviewed by Author
on
June 06, 2023
Rating:


No comments:
Post a Comment