எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!
இலங்கைக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில், கடுமையான இலஞ்சம் மற்றும் ஊழல்கள் நிறைந்துள்ளதாக தெரிவித்து, உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மூன்று அமைப்புக்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.
பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்திற்குப் பின்னர், முன்வைக்கப்படும் இழப்பீட்டு கோரிக்கையை மையப்படுத்தி, இலஞ்சம் மற்றும் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்களை மனுதாரர்கள் சுமத்தியுள்ளனர்.
அத்தோடு, எக்ஸ்-பிரஸ் பேர்ள் இழப்பீட்டு கோரிக்கையைச் சூழவுள்ள தலையீடு மற்றும் வெளிப்புற அழுத்தம் பற்றி மனுதாரர்கள் தரப்புக்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை, நாளை மீள இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
June 14, 2023
Rating:


No comments:
Post a Comment