சீனாவுக்கு மட்டும் ஏன் வரிச்சலுகை ? சபையில் கபீர் ஹாசிம் கேள்வி
இலங்கையில் பணிபுரியும் மக்களிடம் வரி வசூலிக்கும் அரசாங்கம் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மை அற்றதாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
உலகத் துறைமுகங்களில் இலங்கையின் கொழும்புத் துறைமுகம் 123ஆவது இடத்தில் இருப்பதாகவும் லலித் அத்தலமுதலி அதனை 27ஆவது இடத்துக்கு எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
சந்திரிகா மற்றும் மஹிந்த ராஜபக்ஷவும் துறைமுகத்தின் மூன்று முனையங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியிருந்த போதும் அவை வினைத்திறனுடன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
ஆகவே தனியார் துறை முதலீடு முக்கியமானது என்றாலும் அதனை நிர்வகிப்பதற்கான அமைப்பு இருக்க வேண்டும் எனவும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment