ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை இ.தொ கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானமேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில்ஜப்பானியர் கள் இலங்கையில் பார்வையிடாத இடங்களை ஊக்குவிக்க கிழக்கு மாகாணம் மற்றும் மலையகம் ஆகிய இரண்டு பிராந்தியங்களிலும் தனிப்பட்ட அனுபவத்தைப் பெறுவதற்காக வருமாறு செந்தில் தொண்டமானால் அழைப்பு விடுக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஜப்பான் நாட்டில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர், ஜப்பானுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் GSA பணிப்பாளர் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன் போது கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பார்வையிடுவதற்காக சில சுற்றுலா தளங்களை செந்தில் தொண்டமான் பரிந்துரை செய்தார்.
கிழக்கு மாகாணம் - டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களைப் பார்வையிடுவது, சர்ஃபிங், ஸ்கூபா டைவிங், பவளப்பாறை படகு சவாரி, வனவிலங்கு சரணாலயம்,பறவைகள் சரணாலயம், மான் நகரம், தொல்லியல் மற்றும் கலாச்சார தளங்கள், இயற்கை சுற்றுலா தளங்கள்
மலையகம் - மலை காட்சிகள், மலையேற்றம் மற்றும் முகாமிடுதல், தேயிலை தொழிற்சாலைகள், உலக முடிவு இயற்கை சுற்றுலா தளம், ஒன்பது வளைவு பாலம், லிப்டன் சீட், நக்கிள்ஸ் மலைத்தொடர்
செந்தில் தொண்டமானின் பரிந்துரைக்கு அமைவாக, ஜப்பானின் சுற்றுலா நடத்துநர்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகை தருவதாக ஒப்புதல் அளித்ததுடன்,இலங்கை சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக தமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்தனர்.
ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
Reviewed by Author
on
June 21, 2023
Rating:

No comments:
Post a Comment