வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்குமாறு கோரி வவுனியாவில் போராட்டம்!
வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்குமாறு கோரி வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடிச் சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பைக் கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு ஏற்பாடு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்று நிர்க்கதியான பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக போராட்டக்காரர்களினால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போலி முகவர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய கவனமெடுக்க வேண்டும் எனவும் இவர்களால் வலியுறுத்தப்பட்டது.
வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்குமாறு கோரி வவுனியாவில் போராட்டம்!
Reviewed by Author
on
June 01, 2023
Rating:

No comments:
Post a Comment