வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் வீதியில் மக்கள்..! நீளும் எரிபொருள் வரிசை..!
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டாவது நாளாக இன்றும் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.
அத்தோடு நகர மத்தியில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
எரிபொருட்களின் விலைகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டிருந்தமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் எரிபொருளுக்கான முன்கூட்டிய பதிவினை மேற்கொள்ளாமையினால் இவ் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் வீதியில் மக்கள்..! நீளும் எரிபொருள் வரிசை..!
Reviewed by Author
on
June 02, 2023
Rating:

No comments:
Post a Comment