பெற்றோல் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேபோல், ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு லீற்றர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை லீற்றர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 226 ரூபாவாகும்.
Reviewed by Author
on
July 31, 2023
Rating:


No comments:
Post a Comment