மன்னார் மடு முளள்ளிக்குளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
மன்னார் மடு முள்ளிக்குளம் புலப்பரஞ்சன் பகுதியில் நேற்றய தினம் (22) கிணற்றில் தண்ணீர் குரைந்ததால் கிணற்றின் உள்ளே நீர் வரும் குளாய் துளையிடுவதற்கு கில்டி பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கியதாக மின்சாரம் தாக்கியவரை உடனடியாக இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார வைத்திய சாலைக்கு எடுத்து செல்லும்வழியில் உயிர்இழந்தாக கூறப்படுகிறது இரணைஇலுப்பைக்குள வைத்தியசாலையில் இருந்து வவுனியா வமாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடலம் வைத்தியசாலை பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது முள்ளிக்குளத்தை சேர்ந்த 33 வயதுடைய சுப்பிரமணியம் தங்கையா எனபவரே பலியானவர் இது தொடர்பான விசாரணைகளை மடு பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
July 23, 2023
Rating:


No comments:
Post a Comment