அண்மைய செய்திகள்

recent
-

இறால் பண்ணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

 மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெரிவித்து இறால் பண்னைக்கு முன்னால் இன்று நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாங்கேணி, காயன்கேணி, வட்டவான, ஆலங்குளம். இறாலோடை ஆகிய மீனவ அமைப்புக்கள் இணைந்து குறித்த இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து இன்று காலை 10 மணியளவில் காயன்கேணி பழைய பாலத்துக்கு அருகில் 50 க்கு மேற்பட்ட மீனவர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து, அசுத்தப்படுத்தாதே வாவி நீரை அசுத்தப்படுத்தாதே, அழிக்காதே அழிக்காதே மீன் வளத்தை அழிக்காதே, ‘சுத்தமான காற்றை சுவாசிக்க விடு’ ‘மீனவரின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதைதைகள் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக இறால் பண்ணைக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதன் போது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இதனை கவனத்தில் எடுத்து இப்பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆர்ப்பாட்டகாரர்கள் கருத்து தெரிவித்ததுடன் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.





இறால் பண்ணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! Reviewed by Author on July 06, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.