அண்மைய செய்திகள்

recent
-

எதிர்கால பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பில் ஆய்வு நோக்கு அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கு !!

 மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம். அமீர் அவர்களின் தலைமையில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம். அஹ்சாப் அவர்களின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான ஆய்வு நோக்கு அறிக்கை தயாரித்தல் "Proposal Development" சமபந்தமான கருத்தரங்கு 13.07.2023 வியாழக்கிழமை, ஏறாவூர் அல்-முனீறா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் வளவாளராக பிரபல ஊக்கமூட்டல் பேச்சாளரும் (motivational Speaker) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.சி.ஏ. நாசர் வளவாளராக கலந்து கொண்டதுடன் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள 80 இற்கு மேற்பட்ட  பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





எதிர்கால பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பில் ஆய்வு நோக்கு அறிக்கை தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கு !! Reviewed by Author on July 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.