கனடாவில் உயிரிழந்த இலங்கை மாணவர்: 19 நாட்களின் பின்னர் நாட்டை வந்தடைந்த பிரேதம்
கனடாவில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாகனவிபத்தில் இலங்கையைச் சேர்ந்த 28 வயதான ‘எம்.எச். வினோஜ் யசங்க ஜயசுந்தர‘ என்ற இளைஞர் உயிரிழந்தார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்ற குறித்த இளைஞன் கலாநிதி பட்டம் பெறும் நோக்கில் அமெரிக்காவின் மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அத்துடன் கலிபோர்னியாவில் உள்ள அப்பிள் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கனடாவின் வான்கூவர் நகருக்கு பி.எச்.டி தொடர்பான ஆய்வுக் கட்டுரையை வழங்குவதற்காக அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவரது காரின் மீது மதுபோதையில் வந்த வேறு ஒருநபரின் கார் வேகமாக மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
 
        Reviewed by Author
        on 
        
July 12, 2023
 
        Rating: 


No comments:
Post a Comment