அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!

 மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை கிழக்கு மாகாண ஆளுநனர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.

மட்டக்களப்பு கால் நடை திணைக்களத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநரினால் 3.4 மில்லியன் ரூபா இவ்வாறு இழப்பீட்டுத் தொகையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 8 மற்றும் 9 திகதிகளில் மொன்டோஸ் என்றழைக்கப்பட்ட குளிருடன் கூடிய சூறாவழி ஏற்பட்டதில் திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட கால்நடைகள் கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் இறந்திருந்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நஸ்ட ஈடுவழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கால்நடை திணைக்கள காரியாலயத்தில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.பாசி தலைமையில் இடம்பெற்றது

இதில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இழப்பீடுகளை வழங்கி வைத்ததுடன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தனர்.




கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு! Reviewed by Author on July 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.