80 அடி பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து: 27 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவின் ஓக்ஸாக்கா மாகாணத்தில் பேருந்தொன்று சுமார் 80 அடிப்பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் மெக்சிகோவில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த பேருந்தொன்றே, மாக்டலேனா பெனாஸ்கோ என்ற இடத்தில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இக் கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 27 பேர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 அடி பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து: 27 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
July 06, 2023
Rating:

No comments:
Post a Comment