முல்லைத்தீவு மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலைபுலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில் மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வையர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது
முதல் நாள் அகழ்வில் 13 எழும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலதிக அகழ்வு பணிக்காக தற்காலிக அணைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது
வருகின்ற வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிலளுடன் இடம் பெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது
முல்லைத்தீவு மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது
Reviewed by Author
on
July 06, 2023
Rating:
Reviewed by Author
on
July 06, 2023
Rating:






No comments:
Post a Comment